Thursday 20 August 2015

“ஜாதிகள் வீழ்ந்ததடி பாப்பா குல தாழ்ச்சி எழுச்சி சொல்ல ஆளே இல்லை” என்று பாட்டுறைபோம்.

இந்த காதல் ஜோடியின்
கல்யாணத்திற்கு குண்டம் அமைக்க
எரிதழல் பஞ்சமா நாட்டில்
குடிசைகளை எரித்தவன் எவனடா?
இந்த சிட்டு குருவிகள்
கூடுகட்டிய பாவத்திற்காய்
இருநூறு குடிசைகள் எரிக்கப்பட்டதா?
ஜாதி மாறி திருமணம் செய்தால்
அத்தனை கேவளமா?
இதற்கு கலப்பு திருமணம் என்று
பெயர் வைத்தவன் யாரடா?
இங்கே நாய்க்கும் நரிக்குமா
திருமணம் நிகழ்ந்தது?
ஆண் ஜாதிக்கும் பெண் ஜாதிக்கும்
நிகழ்ந்த திருமணம் கலப்பு திருமணமா?
அப்படியென்றால்
ஆணுக்கும் ஆணுக்கும்
பெண்ணுக்கும் பெண்ணுக்கும்
நிகழ்ந்தால் ஏற்று கொள்வீரா?

சதியை ஒழித்துவிட்டு போன
ஆங்கிலேயா ஏன்
சாதியை விட்டு விட்டாய்
இன்று எத்தனையோ
புறாக்கள் கூடு கட்ட முடியாமலேயே
கலைந்து போகிறதே
தந்தை பெரியாரை
மீண்டும் அழைப்போமா
பால்பட்ட தேசத்தை
பண்படுத்தட்டும்

ஜாதி மிருகங்கள்
கொண்டாடுகின்றன
இளவரசன் வீழ்ந்து விட்டான் என
ஜாதி வெறி பிடித்த ஜனநாயகமே
உனக்கு ஒரு எச்சரிக்கை
எங்கள் இளவரசன்
வீழ்ந்து விடவில்லை
விதைக்கப்பட்டு இருக்கிறான்
அதர்மபுரியை அழிக்க
எங்கோ ஒரு ஊரில்
ஏதாவதொரு பெயரில்
மீண்டும் பிறபானடா...

 வரைமுறை இன்றி வாழ்ந்து வரும்
உலக தேசங்களில்
ஒருவனுக்கு ஒருத்தி என்று
வாழ்ந்து வரும்
இது உன்னத தேசமடா
ஆபாச சிலை வடிக்கும்
ஆங்கில தேசங்களே
எம் தேசம்
கன்னகிக்கு சிலை வைத்த
கண்ணிய தேசமடா
கல்லரை அதிசயமாய் (பிரம்மீடு)
எகிப்திய தேசங்களே
காதல் அதிசயம் (தாஜ்மஹால்)
எங்கள் தேசமாடா


இங்கிலாந்தில் இருந்து வந்த
வெள்ளை பண்றிகளை
வேரோடு வீழ்த்தி விட்டோம்
உள்ளுக்குள் இருக்கும்
ஒநாய்களே உங்களையும்
ஒரு நாள் வேரருப்போம்.
அன்று எங்கள் பாட புத்தகத்தில்
“ஜாதிகள் வீழ்ந்ததடி பாப்பா
குல தாழ்ச்சி எழுச்சி சொல்ல ஆளே இல்லை”
என்று பாட்டுறைபோம்.
                   --   ஜெரோ

Sunday 22 December 2013

தண்ணீரில் சிந்திய கண்ணீர் (kavithai Trailer)

தண்ணீரில் சிந்திய கண்ணீர் கவிதையின் விடியோ trailer காட்சி வெளியீடு

தண்ணீரில் சிந்திய கண்ணீர் (கவிதை விமர்சனம்)

தண்ணீரில் சிந்திய கண்ணீர் கவிதையின் விடியோ விமர்சன காட்சி வெளியீடு




Sunday 28 July 2013

இது காதலின் கல்லறை





ஒரு தேனிர் விடுதி - இது
சாலையிலே சக்கரமாய் சுழழும்
எந்திர மனிதர்கள்
சற்று இளைப்பறிகொள்ளுமிடம்
வயிற்றுக்கும் வாழ்க்கைக்குமான
இடைவெளியை கொஞ்சம்
நிரப்பி கொள்ளுமிடம்.
இது காதலர்களின் தாய் வீடு
அரசியல்வாதிகளின் ஒத்திகை மேடை
பயணிகளின் நிழற்குடை
இளைஞர்களின் பொழுதுபோக்கு
இந்த விடுதியில் தான்
இந்த சம்பவமும்
அரங்கேறுகிறது.
      
ஒரு மேஜையின்
நான்கு இருக்கையில்
எதிரெதிர் இருக்கையில்
அதே பழைய விழிகள்
நான்கும் பார்த்து கொள்கின்றன
நொடிகளில் துவங்கிய பார்வை
சில நிமிடங்கள் வரை நீழ்கிறது
நான்கு விழிகளுக்குள்
நான்காயிரம் வினாக்கள்
விடைசொல்ல வேண்டிய
ஊதடுகள் மட்டும் ஊமையாகிவிட்டன
இங்கே பரிமாறிகொள்ள
வார்த்தைகள் இல்லை
அதனாலோ என்னவோ
பார்வை மட்டுமே
பரிமாறிகொள்ளப்படுகிறது.
இவர்கள் பேசிக்கொள்ள
ஆயிரம் வார்த்தைகள் இருந்தும்
பிரிந்து போனவர்கள்
ஊமையான பிறகு
பேசிக்கொள்ள நினைக்கிறார்கள்
இது விதைக்கப்பட்ட
காதல் இல்லை
அறுக்கப்பட்ட காதல்


பக்கத்தில் இருக்கும்
அவள் கணவன்
கோப்பையை நீட்ட
இடக்கரம் வாங்கி
வளக்கரம் சேர்த்து
இருகரம் பற்றி பிடிக்கிறாள்
இப்பொது இவனின் நினைவு
ஏழரை ஆண்டுகள்
பின்னோக்கி பயணிக்கிறது
ஐயங்காரு வீட்டு அழகு நிலவு
வாசலில் நின்று
இருகரம் பற்றி பிடித்து
உள்ளங்கையில் உள்ள
தேனிர் கோப்பையில்
உயிரையே உறிஞ்சி
குடித்த நினைவுகள்
அன்று அவளுக்கு
வயது பதினெட்டு
மயில் தொகை கூந்தல்
மான்விழி பார்வை
வண்ணத்து பூச்சியாய்
சிறகடித்து பறந்த
அந்த நாட்கள்
ஆனால் இப்போது
அவள் கூந்தல் அடர்த்தியில்
கொஞ்சம் குறைந்திருக்கிறது
ஆனால் இன்னும்
சாயம் போகாத அதே விழிகள்
அன்று அவள் காதலை
ஏற்று கொண்டிருந்தால்
திருமணம் ஆகி இன்றோடு
ஏழரை ஆண்டுகள் கடந்திருக்கும்
அவள் கண்கள் குளமாகி
உள்ளிருந்து ஒரு துளி மட்டும் உதிர்ந்து
கன்னத்தில் வழிகிறது
விழுந்த துளி கணவனின்
கண்ணில் படுமுன் துடைக்கிறாள்
புறப்பட தயாராகிறான்
அவள் கணவன்
மடியில் கிடந்த குழந்தையை
தோளில் போட்டுகொண்டு
புறப்படுகிறாள்.
சற்று தூரம் சென்று
மிண்டும் ஒருமுறை
விழியசைத்து விடைபெறுகிறாள்.
இப்போது இவன் பக்கத்தில்
அமர்ந்திருக்கும் மனைவி கேட்கிறாள்
அவ தான் பிரியா வா?

இங்கே
இது போல் காதல்கள்
இன்னும் எத்தனையோ?
சாதிகளால் சிதைக்கப்பட்டவை
மதங்களால் மறுக்கப்பட்டவை

இந்திய மண்ணில்
மட்டும் தான் இந்த நியதி
எழுதப்பட்டு இருக்கிறது
காதலை புதை இல்லையென்றால்
காதலர்களை புதைத்துவிடு
காதலின் சின்னம் தாஜ்மகால்
இங்கு மட்டும் இன்னும் கல்லறையாகவே

Monday 13 May 2013

முற்றிலும் கற்பனை


இங்கே ஒருதலை காதலன் ஒருவன் காதலி தன்னிடம் வந்து காதலை சொன்னால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்கிறான். கவிதையின் சுவைக்காக கற்பனையை சேர்பது இயல்பு ஆனால் கவிதையையே கற்பனையாக எழுதி இருப்பது இந்த கவிதையின் சிறப்பு.

காதலனே
உனக்கு ஒரு
காதல் கடிதம்
எழுத நினைக்கிறேன்...
கைகளை விட கண்களே
அதிகம் எழுதுகின்றன
கவிதை வரிகளாக இல்லை
கண்ணீர் வரிகளாக
நனைந்து போகிறது
காகிதம்.

என் உள்ளத்தின் காதலை
உன்னிடம் உலர நினைக்கிறேன்
எனக்கோ
சொல்ல துணிச்சலில்லை
உனக்கோ
என் ஏக்கம் புரியவில்லை.
இரவு முழுதும்
உன் நினைவுகள் வந்து
உறக்கம் கெடுக்கிறது.
கண்ணீர் கசிந்து
கண்ணீர் கசிந்து
தலையணை நனைகிறது.

என் காதலா
நான் காத்திருப்பேன்
உன்னை மணக்கும் வரை
இல்லையென்றால்
மறிக்கும் வரை
காதலே என் காதலே
நீ வென்றுவிடு
இல்லையேல்
காலமே ஓ காலமே
என்னை கொன்று விடு...

முற்றுபெறாத காதல்


காத்திரு
என்று சொல்
நான் காத்திருக்கிறேன்...
மறந்துவிடு என்று சொல்லிவிடாதே
நான் இறந்துவிட போகிறேன்...
என்னை போ என்கிறாய்
சரி நான் போய் விடுகிறன்
ஆனால் ஒரே ஒரு
நிபந்தனை
முதன்முதல் முதன்முதல்
நான் கனவில் தந்த அந்த
முத்தத்தை மட்டும்
திருப்பி கொடுத்துவிடு...
முற்று புள்ளி இல்லாத
வாக்கியம் போல
முத்தமில்லாமல்
முழுமையில்லாமல்
நிற்கிறது என் காதல்
நீ தரபோகும் முத்தத்தில்
முடியட்டும் என் வாழ்க்கை
இல்லையென்றால்
துவங்கட்டும் நம் வாழ்க்கை...

மரம் வளர்போம்


அருசுவை விருந்தாய்,
அனைத்திற்கும் மருந்தாய்,
என் கவிதைக்கு காகிதமாய்,
ஆலயத்தில் ஒரு ஓவியமாய்,
எரிப்பதற்கு விறகாய்,
எரிந்தாலும் கறியாய்,
செதுக்கினால் சிலையாய்,
துளையிட்டால் குழலாய்,
வெயிலுக்கு நிலாய்,
மழை கொட்டும் போது குடையாய்,
பயன்படும் மரத்தின் அடியில்
கோடரியாய் மனிதம்.
தன்னையே தரணிக்காய்
தாரைவார்பது மரங்கள்
தன்னோடு அதனையும்
சேர்த்தழிப்பது மனிதன்...